சிறுபான்மை மாணவர்களுக்கு அரசு உதவித்தொகை |
என்ஜினீயரிங், மருத்துவம் உள்ளிட்ட தொழில்கல்வி படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு அரசு உதவித்தொகை சென்னை: என்ஜினீயரிங், மருத்துவம் உள்ளிட்ட தொழில்கல்வி படிக்கும் சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு அரசு உதவித்தொகை வழங்க உள்ளது. இதுகுறித்து சிறுபான்மையினர் நல ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:கல்வி உதவித்தொகைமத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை கடந்த 2007-ஆம் ஆண்டில் இருந்து சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர் முதலிய மதத்தை சேர்ந்த பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழில்கல்வி படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்குள் இருக்கவேண்டும். குறைந்த பட்சம் பிளஸ்-2 தேர்வில் 50 சதவீத மார்க் எடுத்திருக்க வேண்டும். ரூ.20 ஆயிரம்படிப்பு கட்டணம் அதிகபட்சமாக ரூ.20 ஆயிரம் மற்றும் விடுதி கட்டணம் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். விடுதியில் இல்லாத மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ.500 கொடுக்கப்படும். கடந்த ஆண்டு விண்ணப்பித்த மாணவர்கள் ஜுலை 26-ந்தேதிக்குள்ளும், புதிய மாணவர்கள் ஆகஸ்டு 10-ந்தேதிக்குள்ளும் அவர்கள் சேர்ந்துள்ள கல்வி நிலையத்தில் விண்ணப்பிக்கவேண்டும். கல்வி நிலையங்கள் விண்ணப்பங்களை சரிபார்த்து விவரத்துடன் சிறுபான்மையினர் நல ஆணையர், 807, 5-வது தளம், அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கு ஜுலை 30-ந்தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும். அதே முகவரிக்கு புதிய விண்ணப்பங்களை கல்விநிலையங்கள் 13-8-2010 தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும். இதுகுறித்த விவரங்களை www.minorityaffairs.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. posted by: Muduvai Hidayath |
No comments:
Post a Comment