Saturday, June 26, 2010

செம்மொழி மாநாட்டின் தொடக்க நிகழ்வின் போது கலாம் எங்கு இருந்தார்?


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு துவக்க விழாவுக்கு இந்தியக் குடியரசு முன்னாள் தலைவரான அப்துல் கலாமை அழைக்காதது நடுநிலையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இருப்பினும் தமிழினத்தின் மிக மூத்த தலைவர் எடுக்கும் விழா என்பதால் தங்கள் அதிருப்தியை மூட்டை கட்டி வைத்து விட்டு செம்மொழி மாநாட்டு நிகழ்ச்சிகளை கண்டு களித்து வருகின்றனர்.

தங்கள் அதிருப்தியை தற்போது வெளிப்படுத்துவது நாகரீகமில்லை. மாநாடு முடிந்தபிறகு தங்கள்  குமுறலை வெளிப்படுத்தலாம் என  சிலர் காத்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. ஆனாலும் செம்மொழி மாநாட்டு துவக்க நிகழ்ச்சிகள்  கோலாகலமாக  நடைபெற்றன.

அப்போது கலாம் எங்கிருந்தார் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி. ஆமாம். கலாம் எங்கு தான் இருந்தார்?

அப்போது கலாம் மும்பையில் இருந்தார். புகழ் பெற்ற கார்டூனிஸ்ட்டான ஆர் கே  லட்சுமணன்  உடல் நலக்குறைவாக மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரைச் சந்தித்து உடல் நலம் விசாரிப்பதற்காக கலாம் மும்பை சென்றிருந்தார்.

இதனை பார்க்கும்போது எனக்கு வரலாற்று சிறப்பு மிக்க மற்றொரு காட்சி என் நினைவுக்கு வருகிறது.

இந்தியா விடுதலை பெற்று நாடே கொண்டாட்டத்தில் திளைத்துகொண்டிருக்கிறது.  அப்போது விடுதலை போராட்ட களத்தின் தலைமை தளபதி யான காந்தியார் எங்கிருந்தார் தெரியுமா  மேற்கு வங்காளத்தில்  சவரி சவரா என்ற இடத்தில் நிகழ்ந்த வகுப்பு கலவரத்தை கண்டித்து உண்ணாவிரதம் இருந்தார் . ஒவ்வொரு சான்றோரின் வாழ்க்கையிலும் இத்தகைகைய சம்பவங்களே விரவிக்கிடக்கும்போலும்.

1 comment:

சீமாச்சு.. said...

முன்னாள் குடியர்சுத்தலைவர், கலாமை அழைக்காததில் எனக்கும் வருத்தமே. இது போன்ற பகட்டான விழாக்களெல்லாம் கலாம் அவர்களின் ரசனையில் இல்லை. அவர் அதிகமாக சந்திக்க ஆசைப்படுவது குழந்தைகளைத்தான். அழைக்காததில் கலாமுக்கு ஒன்று நட்டமில்லை.. இவர்களையெல்லாம் விட மிகமிக உன்னதமான தலைவர் அவர்.

LinkWithin

Related Posts with Thumbnails