Friday, June 11, 2010

இரகசியம் ஒரு அமானிதமே! – Audio/Video

எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி அலி அக்பர் உமரீ

மோசடி என்பது இஸ்லாத்தில் கடுமையான தண்டனைக்குரியது. அதிலும் குறிப்பாக அமானித மோசடி என்பது அதைவிட கடுமையான தண்டனைக்குரியது. நம்மில் பலருக்கு ‘இரகசியமும் ஒரு அமானிதம்’ என்பது தெரியாததால், நாம் ஒன்றாக இருந்த போது நம்மிடையே பகிர்ந்துக்கொண்ட இரகசியங்களை அற்ப சில காரணங்களுக்காக கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்ட பிறகு, நம்மிடம் கூறப்பட்ட அமானிதங்களான இரகசியங்களை பிகிரங்கப்படுத்துவதன் மூலம் ‘அமானித மோசடி’ செய்து மிகப்பெரிய பாவத்திற்குள்ளாகின்றோம். எனவே சகோதர, சகோதரிகளே! ‘இரகசியம் காப்பதும் ஒரு அமானிதம் பேணுதலே!’ என்றுணர்ந்து அதைப் பேணி நடப்பவர்களாக அல்லாஹ் நம் அனைவர்களையும் ஆக்கியருள்வானாகவும்.
தமாம் இஸ்லாமிய கலாச்சார மையம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி ஏற்பாட்டில் 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற இஸ்லாமிய கருத்தரங்கம் ஒன்றில் மௌலவி அலி அக்பர் உமரி அவர்கள் ஆற்றிய இந்த அற்புத உரையை சகோதர இணைய தளம் இஸ்லாமிய தஃவா.காம் ஏற்கனவே இதை வெளியிட்டிருக்கிறார்கள். இருப்பினும் இந்த உரை எக்காலத்திலும், அதிலும் குறிப்பாக தற்போது, ஒரு குழுவிலிலிருந்து பிரிந்து சென்று பல குழுக்களாகி சண்டையிட்டுக் கொண்டிருக்கும் நமது சகோதரர்களுக்கு இந்த உரை அவசியம் தேவையானது என்பதாலும், நம்மிடம் பிறர் கூறிய இரகசியங்களை நமது நெருங்கிய உறவினர் அல்லது நண்பர்களிடம் பகிர்ந்துக் கொள்வதன் மூலம் அந்த அமானிதத்தை பேணுவதில் பெரும் தவறிழைப்பவர்களாக இருப்பதாலும் நாம் அனைவரும் இதைக் கேட்டு சீர்திருந்துவதற்காக இதை மீள்பதிவு செய்கின்றோம்.
ஜஸாக்கல்லாஹ் ஹைரன் : இஸ்லாமிய கலாச்சார மையம் தமாம், இஸ்லாமிய தமிழ் தஃவா கமிட்டி, தமாம் மற்றும் இஸ்லாமிய தஃவா.காம்.
நிர்வாகி,
சுவனத்தென்றல்.காம்.
உரை நிகழ்ந்த இடம் : இஸ்லாமிய கலாச்சார மையம் இஃப்தார் கேம்ப், தம்மாம், சவூதி அரேபியா
நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய கலாச்சார மையம் தமாம் மற்றும் இஸ்லாமிய தமிழ் தஃவா கமிட்டி, தமாம், சவூதி அரேபியா.
ஆடியோ : (Download) {MP3 format -Size : 8.1 MB}
வீடியோ : (Download) {FLV format – Size : 84.6 MB}
Source : http://suvanathendral.com/portal/?p=1172இரகசியம் ஒரு அமானிதமே! – Audio/Video

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails