அப்பா ("அத்தா ") இல்லாமல் நீ எங்கிய நிலை உனக்கு வரவேண்டாம் .
அவர் இன்றி நீ எங்கே ?
ஒரு பொருளின் மதிப்பு இழந்த பொழுதுதான் அறியும் நிலை
உனக்கு வேண்டாம்.
இருக்கும்போது எப்பொழுதும் அருமை தெரியாது.
சில விஷயங்களில் அப்பா சொன்னது பிடித்ததில்லை
இப்போது புரிந்தது அதன் பொருளின் மதிப்பு !
நானும் இப்போது ஒரு அப்பா ("அத்தா " )
அப்பாவிடம் ("அத்தா " ) அவர் இருக்கும் பொழுதே பாசத்தைக் காட்டு, பரிவைக் காட்டு,கனிவு காட்டு, அன்பாகப் பேசு,
இறையருள் பெற்றிடு, இறைப் பொருத்தத்தை பெற்றிடு
அப்பப்பா!!! அவர் இன்றி நாம் எங்கே ?
அல்லாஹ் நாடும் பொழுது நடக்கட்டும் .
"உங்கள் தகப்பனை நீங்கள் வெறுக்காதீர்கள். தம் தகப்பனை வெறுத்து (வேறொருவரைத் தம் தகப்பன் என்று கூறி)விடுகின்றாரோ அவர் நன்றி கொன்றவர் ஆவார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).
ஒரு மனிதர் நபி صلى الله عليه وسلم அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! நான் மிக அழகிய முறையில் நடந்து கொள்ள மிகவும் தகுதி பெற்றவர் யார்?'' என்று கேட்டார். நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: "உமது தாய், பின்பும் உமது தாய், பின்பும் உமது தாய், பிறகு உமது தந்தை, அதற்குப் பிறகு உமக்கு மிக நெருக்கமாக இருப்பவர், அடுத்து உமக்கு நெருக்கமாக இருப்பவர்.'' (நூல்: ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
பாகம் 1, அத்தியாயம் 2, எண் 14
'என்னுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக, உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தையையும் அவரின் மக்களையும் விட நான் மிக்க அன்பானவராகும் வரை அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கை உள்ளவராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(நூல்: ஸஹீஹுல் புகாரி,)
. இங்கேClickThis
அன்புடன் நான்
1 comment:
அஸ்ஸலாமு அலைக்கும் மாமா!
அனைவரும் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டிய நல்லதொரு சிந்தனை.
Post a Comment