Wednesday, June 9, 2010

சிறுபான்மையினர் நலனுக்கு நான்கு புதிய திட்டங்கள்

மத்திய அரசின் சிறுபான்மையினர் நல அமைச்சகம் சிறுபான்மையினரின் நலன்களுக்காக நடப்பு நிதியாண்டில் நான்கு புதிய திட்டங்களை செயல்படுத்தவுள்ளது. அவை வருமாறு :

1.       மாநில வக்பு வாரியங்களை வலுப்படுத்துவது.

2.   சிறுபான்மை சமுதாயத்தை சார்ந்த மாணவர்கள் வெளிநாட்டில் கல்வி பயில அளிக்கப்படும் கல்வி கடனுக்கான வட்டியை மானியமாக அளிப்பது.

3.   மொழி சிறுபான்மையினருக்கான மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வது.

4.   குறைந்த எண்ணிக்கையில் உள்ள சிறுபான்மை சமுதாயத்தினரின் மக்கள் தொகை வீழ்ச்சியை தடுப்பது.

இந்த நான்கு புதிய திட்டங்களுடன் சேர்த்து சிறுபான்மை நல அமைச்சகம் மேற்கொள்ளும் நலத்திட்டங்களின் எண்ணிக்கை 16-ஆக அதிகரித்துள்ளது. இத்திட்டங்களுக்காக 2010-11ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் ரூ.11 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
Source : http://www.inneram.com/201006098756/4new-plans-for-the-welfare-of-minoritiesசிறுபான்மையினர் நலனுக்கு நான்கு புதிய திட்டங்கள்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails