Monday, June 7, 2010

பேசும் கலை

"அளவற்ற அருளாளன் அவன் தான் அல்குர்ஆனை கற்றுக் கொடுத்தான். அவனே மனிதனையும் படைத்தான். அவனுக்குத் தெளிவாகப் பேசவும் கற்றுக் கொடுத்தான்" (55: 1-4) இவை ஸூறதுர் ரஹ்மானின் ஆரம்ப வசனங்கள்.  அல்லாஹ் - அல்குர்ஆன் - மனிதப் படைப்பு போன்ற விடயங்களோடு பேசும் கலையை தொடர்புபடுத்திப் பேசுகிறான் அவன்.அந்தளவு தூரம் பேச்சானது மனித வாழ்வோடு இணைந்த ஒன்றாக காணப்படு வதுதான் அதற்கான காரணம். ஐயறிவு படைத்த அனைத்து உயிரிணங்களையும் விட மேலதிகமான ஒன்றான பகுத்தறிவு மனிதனை வேறுபடுத்துகின்றது. பகுத்தறியும் திறனோடு பேசும் மனிதன் நிறைவான மனிதப் பண்புகளைப் பெற்று விடுகிறான்.மனிதனின் ஆளுமை விருத்தியில்கூட பேச்சானது ஆழ்ந்த தாக்கம் செலுத்து கின்றது. எந்தப் பௌதீக வளங்களும் இல்லாத மனிதன் தான் பெற்றுள்ள பேச்சு வளத்தை அறிய பொக்கிஷமாகக் கருத வேண்டும். பேச்சுக்கு மக்களைக் கவர்ந்திழுக்கும் வசீகர சக்தி அதிகமுண்டு. நிச்சயமாக தெளிவான பேச்சில் வசீகரிக்கும் சக்தி உண்டு. (ஹதீஸ்)தஃவாவின் ஆரம்ப நாட்களில் சோதனைகளால் சூழப்பட்ட போது சூழவிருந்த தோழர்களுக்கான மானசீகரீதியான உள ஆற்றுப் படுத்தலை வழங்கியது நபியவர்களின் ஆற்றொழுக்கான நடையையும் அப்பழுக்கற்ற சொற்களையும் கொண்ட வார்த்தைகள்தான். இறை நிராகரிப்பில் கட்டுண்டு போனவர்களை இஸ்லாமிய ஒழிக்கீற்றின் பால் ஈர்த்தது  நபியவர்களின் அழகிய பேச்சாற்றல் தான்.கவிதை நெய்வதில் தனக்கென தன்னிகரற்ற அந்தஸ்தை தக்கவைத்த வலீத் பின் முகீரா; வஹியின் பின்புலத்தோடு நபியவர்கள் மொழிந்த கவிநயமிக்க வரிகளுக்கு முன்னால் தனது இயலாமையை உணர்ந்து நொந்து போனான்.உண்மையில் பேச்சானது ஈமானின் வெளிப்பாடாக மட்டும் அமையுமாயின் நிறைய தாக்கம் செலுத் தும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிய வர்கள் பேசினால் நல்லதையே பேசட்டும். இன்றேல் மௌனம் காக்கட்டும் என்றார்கள். (புஹாரி, முஸ்லிம்)வார்த்தைகளின் சக்தியானது மின்சாரத்தை, அணுசக்தியைவிட மனித உள்ளங்களில் அழுத்தமான தாக்கங்களை ஏற்படுத்துமென சமூகவியலாளர்கள் கூறுவார்கள். நபியவர்கள்கூட பேசினால் மிகத் தெளிவாக விளங்கும் வண்ணம் பேசுவார்கள். ஏதாவதொரு விடயம் சம்பந்தமாக பேசினால் அதன் அத்தனை வார்த்தைகளையும் எண்ணிக் கணிப்பிட முடியும். (முத்தப குன் அலைஹி)நல்ல வார்த்தைக்கான உதாரணம்; நிலத்தில் ஆழ வேரூன்றி வானில் அடர்ந்த கிளைகளைப் பரப்பியுள்ள நல்ல பலமான விருட்சத் திற்கு ஒப்பானது என்று அல்குர் ஆன் குறிப்பிடுகின்றது. (ஸூறா: இப்றாஹீம்) அனைவருக்கும் பேச முடியும். ஆனால், திறம்பட பேச முடியாது. வார்த்தைகளால் மக்களை வசீகரிப்பது தர்மமாக அமையும். அது நல்ல வார்த்தையாக இருந்தால் மட்டும். நல்ல வார்த்தையும் தர்மமாகும். (புஹாரி, முஸ்லிம்)இமாம் ஹஸனுல் பஸரி கூறு கிறார்; புத்திசாலித்தனமான நாவு அவனது உள்ளத்தின் பின்னால் இருக்கும். பேச நினைத்தால் அவன் சிந்திப்பான். நலவு இருந்தால் பேசுவான். கெடுதி இருந்தால் தவிர்ப்பான். மடையனின் உள்ளம் நாவின் பின்னால் இருக்கும். நினைத்த உடனே பேசுவான். தனக்கு சார்பாக அமையின் மௌனிப்பான். எதிராக இருப்பின் உடனே மொழிவான்.எனவே, அழகாய்ப் பேசுவது மனிதன் நினைத்து செய்யும் பணியல்ல. அது இறைவன் கொடுத்த அருள். சமூக வாழ்வில் வெற்றி பெறவுள்ள அத்தனை மனிதர்களும் இதில் மிகக் கூடிய கவனம் செலுத்த வேண்டும். பேச்சாற்றலை இஸ்லாமிய தஃவாவின் நலனுக்காகவும் இறை திருப்தியைப் பெற்றுக் கொள்ளவும் பயன் படுத்த வேண்டும். தன்னைச் சூழ மனிதர்களை சேர்த்துக் கொள்ள நினைப்பவர்கள் பேச்சுக்கலையை வளர்த்துக் கொண்டால் தஃவாவை மேலும் முன்வைக்கலாம்.
 எம்.எம்.ஏ. பிஸ்தாமிமள்வானை
 Source : http://www.meelparvai.netபேசும் கலை

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails