ஒஸாமா பின்லேடனின் பேரப்பிள்ளை எனது வயிற்றில் வளர்கிறது
அல்கொய்தா தலைவர் ஒஸாமா பின்லேடனின் பேரப்பிள்ளையை தான் வயிற்றில் சுமந்து கொண்டிருப்பதாக பிரித்தானிய பெண் ஒருவர் உரிமை கோரியுள்ளார்.
ஒஸாமா பின்லேடனின் நான்காவது பிள்ளையான ஓமர் பின்லேடனது (29 வயது) விந்தணுக்களையும் அவரது பிரித்தானிய மனைவியான ஜேன் பீலிக்ஸ் பிறவுணியினது (54 வயது) கரு முட்டைகளையும் பயன்படுத்தியே மேற்படி வாடகைத் தாயான லூஸி போல் லார்ட் (29 வயது) கருத்தரித்துள்ளார்.
கட்டாரில் தற்போது மனைவியுடன் வாழும் ஓமர், இணையத்தளம் மூலமே தமது குழந்தையைச் சுமப்பதற்கான வாடகைத் தாயாக லூஸி போல்லார்ட்டை நியமனம் செய்தார்.
இந்நிலையில் பிறிஸ்டலில் வசிக் கும் லூஸி போல்லார்ட்டுக்கு வாடகைத் தாயாக செயற்படுவதற்கு 30,000 ஸ்ரேலிங் பவுண் வழங்கப்பட்டுள்ளது.
பின்லேடனின் பேரப்பிள்ளையைச் சுமப்பது தொடர்பில் லூஸியின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
படைவீரரான டாமியன் என்பவரைத் திருமணம் செய்து பிரிந்து வாழும் லூஸி, ஏற்கனவே லண்டன் ஜோடி ஒன்றுக்காக இரு தடவைகள் குழந்தையை வயிற்றில் சுமந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டாரில் உலோகப் பொருள் வியாபாரியாக திகழும் ஓமருக்கு முன்னைய திருமணத்தின் மூலம் 6 வயது மகன் ஒருவன் உள்ளான்.
பின்லேடனின் முதல் மனைவியான நஜ்வாவின் மகனான ஓமர், 2007 ஆம் ஆண்டு எகிப்திய பிரமிட்டுக்கான சுற்றுலாவின் போது ஜேனைச் சந்தித்து காதல் கொண்டார். அவர்கள் இருவரும் சந்தித்து ஒரு மாதத்தில் திருமண பந்தத்தில் இணைந்தனர். இது ஜேனுக்கு ஆறாவது திருமணமாகும். அவருக்கு முன்னைய திருமணங்கள் மூலம் 3 பிள்ளைகள் உள்ளனர்.
தற்போது இஸ்லாமிய மதத்துக்கு மாறியுள்ள ஜேன், தனது பெயரை ஸானியா மொஹமட் அல் சபாஹ் பின்லேடன் என மாற்றி வைத்துள்ளார்.
தனது தந்தையான பின்லேடனை 2001 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 ஆம் திகதி தாக்குதலுக்கு பின் ஒரு தடவையும் சந்திக்கவில்லை என ஓமர் தெரிவித்தார்.

http://mrishan.blogspot.com/2010/06/blog-post_25.html
No comments:
Post a Comment